விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி: விவசாயிகளின் நில விபரங்கள், ஆதார்,பயிர் சாகுபடி, அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக வருவாய் கிராமங்கள் தோறும் வேளாண் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண் பெற்றால் மத்திய, மாநில அரசு திட்டங்களில் எளிதில் பயன்பெற முடியும். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கு மார்ச் 31க்குள் சிறப்பு முகாம்கள் அல்லது பொது சேவை மையங்களில் கட்டணமின்றி பதிவு செய்து பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement