கூரை உடைந்து வீட்டிற்குள் விழுந்த மிளா மான் மீட்பு

மூணாறு: தெரு நாய்கள் துரத்தியதால் உயிருக்கு அஞ்சி ஓடிய மிளா மான் கூரை உடைந்து வீட்டினுள் விழுந்த நிலையில் வனத்துறையினர் மீட்டு, காட்டில் விட்டனர்.

மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சைலன்ட் வாலி எஸ்டேட் இரண்டாம் டிவிஷனில் வழி தப்பி குடியிருப்பு பகுதிக்கு வந்த மிளா மான் தெரு நாய்களிடம் சிக்கியது. மிளா தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு கூரையில் குதித்தது. 'ஆஸ்பெட்டாஸ்' மூலம் அமைக்கப்பட்ட கூரை என்பதால் உடைந்து ரஞ்ஜித்தின் வீட்டிற்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. உயிர் தப்பிய மிளா மானை வனத்துறையினர் மீட்டு, காட்டில் விட்டனர்.

Advertisement