ஸ்டாலின் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்



ஸ்டாலின் பிறந்த நாள் விழாநலத்திட்ட உதவிகள் வழங்கல்
தர்மபுரி:தர்மபுரி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., இலக்கிய அணி சார்பில், பாலக்கோடு கிழக்கு ஒன்றியம் செல்லியம்பட்டி பஞ்.,ல் உள்ள மறுவாழ்வு இல்லத்தில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின், 72வது பிறந்த நாளை விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்மகேஸ்வரன் ஏற்பாட்டில் இனிப்பு, அசைவ உணவு, போர்வை ஆகியவற்றை மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கு, தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் தர்மசெல்வன் வழங்கி பேசினார். தொடர்ந்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் ஆணையை ஏற்று, உறுதிமொழி வாசிக்க, அதை அனைவரும் ஏற்றனர்.
இதில், பாலக்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ், நேசமணி, பிரகாஷ், ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement