லிட்டில் பிளவர் பள்ளி ஆண்டு விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் லிட்டில் பிளவர் பள்ளியின் 20வது ஆண்டு விழா தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமையில் நடந்தது.

பள்ளி நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார். முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் புதுச்சேரி அரசின் சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் அரசு செயலாளர் சுந்தரேசன், ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் கணபதி ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

பள்ளி ஆலோசகர் பிரைசலின், ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா, பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் சேவியோ மரியா, பிரகன்சி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஏற்பாடுகளை ஆசிரியைகள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா ஆகியோ செய்திருந்தனர்.

Advertisement