அரசு பஸ்சில் ரேடியேட்டர் பழுது: பயணிகள் அவதி

தேவதானப்பட்டி: ஈரோட்டிலிருந்து குமுளி நோக்கி செல்லும் பைபாஸ் ரைடர் பஸ் (டி.என் 57. எண் 2315) நேற்று காலை புறப்பட்டு திண்டுக்கல் வழியாக நேற்று மதியம் 1:00 மணிக்கு தேவதானப்பட்டி வந்தது.

ஈரோடைச் சேர்ந்த டிரைவர் தங்கவேல் பஸ்சை ஓட்டி வந்தார்.

அங்கிருந்து தேவதானப்பட்டி பெரியகுளம் ரோடு பிரிவு செல்லும் போது ரேடியேட்டர் பழுது காரணமாக நடுரோட்டில் பஸ் நின்றது. அப்போது வெயில் தாக்கம் அதிகளவு இருந்தது.

பஸ்சில் பயணித்த 30க்கும் அதிகமான பயணிகள் இரு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் டெப்போவிற்கு இரவில் வரும் அரசு பஸ்களை முறையாக பழுது நீக்கி இயக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

--

Advertisement