பிளஸ் 2 பொதுத்தேர்வு தர்மபுரி, கிருஷ்ணகிரியில், 934 பேர் 'ஆப்சென்ட்
பிளஸ் 2 பொதுத்தேர்வுதர்மபுரி, கிருஷ்ணகிரியில், 934 பேர் 'ஆப்சென்ட்'
தர்மபுரி:தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வுக்கு, மொத்தம், 934 மாணவ, மாணவியர், 'ஆப்சென்ட்' ஆகினர்.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், 103 அரசு பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப்பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 65 தனியார் பள்ளிகள் என, 177 பள்ளிகளை சேர்ந்த, 9,365 மாணவர்கள், 9,971 மாணவியர் என மொத்தம், 19,336 பேர் தேர்வெழுத இருந்தனர். இதில், 83 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். தேர்வில், 243 மாணவர்கள், 295 மாணவியர் என, 538 பேர், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 18,798 பேர் தேர்வை எழுதினர். இதில், மாணவியர் அதிகளவில், 'ஆப்சென்ட்' ஆனது குறிப்பிடத்தக்கது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 191 அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 10,409 மாணவர்கள், 11,540 மாணவியர், 231 மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் என மொத்தம், 22,180 பேருக்கு, 87 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமையில், மாணவியருக்கு கற்பூரம் ஏற்றி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து, வெற்றி திலமிட்டு தேர்வுக்கு அனுப்பினர். கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதிரியார் தலைமையில், மாணவியர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
நேற்றைய முதல் நாள் தமிழ்த்தேர்வை, 396 பேர் எழுதவில்லை. மாணவ, மாணவியர் தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல பஸ் வசதிகளும், தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தேர்வு மையங்களை கண்காணிக்க, 117 பறக்கும் படை அலுவலர்கள், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 87 முதன்மை கண்காணிப்பாளர்கள், 87 துறை சார்ந்த அலுவலர்கள், 33 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
************************
மேலும்
-
முகூர்த்தக் கால் நடும் விழா
-
தொகுப்பு வீடுகள் இடிந்து விழுவதால் வெளியேறும் குடும்பங்கள் பொட்டிபுரம் இந்திரா காலனியின் அவலம்
-
கூரை உடைந்து வீட்டிற்குள் விழுந்த மிளா மான் மீட்பு
-
பழி வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் டிரைவர்கள் போராட்டம் நடத்த முடிவு
-
பணி நியமன ஆணை வழங்கல்
-
விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்