திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவம் நாளை கொடியேற்றம்: மார்ச் 14ல் தெப்பம்
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில்மாசி தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும்.இன்று மாலை 6:00 மணிக்கு பூர்வாங்க பூஜை துவங்குகிறது. சக்கரத்தாழ்வார் திருமாமணி மண்டபம் எழுந்தருளலும், பூமி பூஜை, கருடன், கொடிபடத்திற்கு கண்திறப்பு, ேஹாமம் நடைபெறும். பெருமாள், உற்ஸவருக்கு அபிஷேகம் நடைபெறும்.
நாளை காலை 7:00 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் கொடிமரம் அருகில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து சக்கரத்தாழ்வார், கொடிப்படம் திருவீதி வலம் வருவர். பலிபீட பூஜை நடந்து கொடிமரம் அருகில் கொடிபடத்திற்கு பூஜை நடந்து காலை 10:00 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறும்.
பின்னர் கொடிபடத்திற்கும், பெருமாளுக்கும் பூஜைகள் நடைபெறும். பின்னர் பெருமாள் பள்ளியறை எழந்தருளுவார். மாலை 6:30 மணி அளவில் சுவாமிக்கும்,ஆச்சார்யாருக்கும் காப்புக்கட்டி உற்ஸவம் துவங்குகிறது. இரவில் தங்கப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியருடன்திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து, தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் சிம்ம,அனுமன், தங்க கருடன்,தங்க சேஷன், குதிரை வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும்.
ஒன்பதாம் நாளை முன்னிட்டு மார்ச் 13 மதியம் 12:50 மணிக்கு வெண்ணெய்த்தாழி சேவையாக பெருமாள் கோயிலில்இருந்து புறப்பட்டு தெப்பக்குள மண்டபம் எழுந்தருளலும், தெப்பம் முட்டுத் தள்ளுதலும் நடைபெறும். இரவில் வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா நடைபெறும்.
மார்ச் 14 மதியம் 12:16 மணி அளவில் பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் திருவீதி உலாவுடன் உற்ஸவம் நிறைவடையும்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை