சுவாமி சிலை உடைப்பு

பழையனுார்: பழையனுார் அருகே கீழராங்கியம் கிராமத்தில்சாலையோர கோயிலில்இருந்த ஆதிராஜா சிலையை சேதப்படுத்தியநபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலராங்கியம்கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் அக்னி 48, மன நிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம்மாலை ராங்கியன் கண்மாய் கரை அருகே இருந்த ஆதிராஜா கோயிலில் ஆதிராஜா சிலையை சேதப்படுத்தியுள்ளார். சிலை இரண்டாக உடைந்தது. அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியுள்ளார். பழையனூர் போலீசார் அக்னியிடம் விசாரித்து வருகின்றனர்.

அக்னி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் சேதமடைந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைத்து தருவதாக உறவினர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

Advertisement