தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி : பூட்டிய வீடுகளில திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் கனகவள்ளி, விஜயராகவன் தலைமையிலான போலீசார் கடந்த 1ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேர் பூங்காவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜா (எ) ராக்கெட் ராஜா, 27; பரமனத்தம் துரைராஜ் மகன் பிரசாந்த், 32; என்பதும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. கடந்த 21ம் தேதி, மோ.வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ., வினோத், 41; வீட்டில் 3 கிராம் தங்க காசுகள் மற்றும் 4 வெள்ளி கொலுசுகள் உட்பட 267 கிராம் வெள்ளி நகைகளை திருடியது தெரிந்தது. அதேபோல், கடந்த 20ம் தேதி நிறைமதி மணி, 35; என்பவரது வீட்டில் செயின், ஜிமிக்கி உள்ளிட்ட 4 சவரன் தங்க நகைகள் மற்றும் கல்லாநத்தம் பெரியசாமி, 41; வீட்டில் 11 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி நகைகளை திருடியுள்ளனர்.
திருடிய நகைகளில் சிலவற்றை கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் பகுதியில் உள்ள கடைகளில் அடகு வைத்துள்ளனர். தொடர்ந்து, ராஜாவின் வீட்டிலிருந்த 42 கிராம் தங்கம் மற்றும் 535 கிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, ராஜா மற்றும் பிரசாந்த் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வலது காலில் முறிவு
திருடிய வீடுகளை அடையாளம் காண்பிப்பதற்காக இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என ராஜா தெரிவித்தவர், திடீரென தப்பியோடி கோமுகி ஆற்றுபாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், ராஜாவின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.
மேலும்
-
சிட்டி கிரைம் செய்திகள்
-
சிக்கலில் அரசு பஸ்சை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு 220 புதிய ஸ்கூட்டர்கள்
-
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 239 பேர் 'ஆப்சென்ட்'
-
14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் கூடைப்பந்து; குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி வெற்றி
-
'கேன்ஸ் ஓபன்' சர்வதேச செஸ் போட்டி; கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்