சிட்டி கிரைம் செய்திகள்

மது குடித்தவர் பலி



கோவை இடையர்பாளையம் நீலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன், 62. குடும்பத்தினர் நேற்று முன்தினம், சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த முருகன், தடாகம் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தினார். மது போதையில் பார் அருகே அவர் தூங்கினார். தூக்கத்திலேயே உயிரிழந்தார். சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து, மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

விபச்சாரம்; பெண் கைது



கோவை, சேரன்மாநகர் பாலாஜி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக, பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கர் பாலாஜி நகரை சேர்ந்த, 43 வயது பெண்ணை, போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement