14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் கூடைப்பந்து; குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி வெற்றி

கோவை; 'சென்டீஸ் சாம்பியன்ஷிப்' கூடைப்பந்து போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி சாம்பியன்ஷிப் வென்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், 14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 18 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

கால்பந்து போட்டியில், 19 அணிகளும், கோ-கோ போட்டியில், 15 அணிகளும் விளையாடின. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த கூடைப்பந்து இறுதிச்சுற்றில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 45-16 என்ற புள்ளிகளில், கே.பி.ஆர்.ஐ.இ.டி., அணியை வென்று முதலிடம் பிடித்தது.

கால்பந்து இறுதிப்போட்டியில்,கே.பி.ஆர்., அணி, 1-0 என்ற கோல்களில், ஈரோடு கே.இ.சி., அணியை வென்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், ஈரோடு இ.எஸ்.இ.சி., அணி, 1-0 என்ற கோல்களில், என்.ஐ.இ.டி., அணியை வென்றது.

கோ-கோ இறுதிப்போட்டியில், ஈரோடு கே.இ.சி., அணி, 18-17 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியை வென்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 8-5 என்ற புள்ளிகளில், எஸ்.எஸ்.ஐ.இ.டி., அணியை வீழ்த்தியது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், உடற்கல்வி இயக்குனர் வேலுச்சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Advertisement