சிக்கலில் அரசு பஸ்சை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

சிக்கல்: ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் வழியாக சாயல்குடி மற்றும் திருச்செந்துார் செல்லும் பஸ்சை நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்கள் சிறை சிறைப்பிடித்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து 8:40 மணிக்கு திருச்செந்துார் செல்லும் கும்பகோணம் கோட்ட புறநகர் அரசு பஸ் சிக்கலில் பொது மக்களை இறக்கி விடாமல் சென்றதாக பலமுறை புகார் எழுந்தது.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். பொதுவாக இரவு நேரங்களில் பெண் பயணியர் மற்றும் முதியவர்களிடம், இங்கு சிக்கலில் ஸ்டாப் இல்லை என கண்டக்டர் கூறியதால் வேற ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோ பிடித்து ஊருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனையறிந்த பொதுமக்கள் சிக்கல் வழித்தடத்தில் இயங்கிய அரசு பஸ்சை சிறைப்பிடித்து பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் எங்கள் கோரிக்கையை கேளுங்கள் இதுபோன்று செய்யாதீர்கள் முறையாக ஸ்டாப்பிங்கில் நிறுத்துங்கள், என வாதாடினர்.

பொதுமக்களின் கோரிக்கையை கேட்ட பஸ் டிரைவரும், கண்டக்டரும் சரி சிக்கலில் நிறுத்துகிறோம் எனக்கூறியபிறகு புறப்பட்டு சென்றனர்.

Advertisement