மாற்றுத்திறனாளிகளுக்கு 220 புதிய ஸ்கூட்டர்கள்

கோவை; கோவை மாவட்டத்தில் கால்கள் செயலிழந்த, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு, 220 ஸ்கூட்டர்கள் வந்துள்ளன.

கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நான்கு சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, டி.வி.எஸ்., நிறுவனத்திடமிருந்து, 220 வாகனங்கள் வாங்கப்பட்டன.

ஒவ்வொரு வாகனமும் 1.04 லட்சம் ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளன. வாகனங்கள் தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயக்க முடியும். வாகனங்களுக்கான பதிவு எண்கள் பெறப்பட்டு விரைவில் மாற்றுத்திறனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும் என்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement