2 மாணவியர் மாயம்: தீவிரமாக தேடுது தனிப்படை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செறுமன கோணத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவியர், ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம்.

பிப்., 28ல் பள்ளி சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரின் பெற்றோரும், திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், மாணவியர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மாணவியரை தேடி தனிப்படை போலீசார் கேரளாவிலும், சென்னையிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement