சென்னை ஐ.டி., ஊழியரிடம் பணம் பறித்த 4 பேர் கைது
களக்காடு, : சென்னையில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிபவர் தனசேகர், 36. இவர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும், 'கிரைண்டர்' என்ற செயலியில் திருநெல்வேலி செல்வதாக இவர் பதிவிட்டார்.
அதை கவனித்த செங்குளம் சுரேஷ், 20, சந்திக்க ஆசைப்படுவதாக கூறினார். பத்மனேரி அருகே கல்குவாரிக்கு தனசேகரை வரவழைத்தனர். அங்கு சுரேஷ் உள்ளிட்ட சில சிறுவர்கள் சென்றனர். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரிந்து கொண்டு மிரட்டி, 1,000 ரூபாயை அவரிடம் பறித்தனர்.
பின், கூகுள்பேவில் 10,000 ரூபாயை பறித்தனர். அவரிடமிருந்த மொபைல் போனையும் பறித்துக்கொண்டனர். மிரட்டலுக்கு பயந்து சென்னை சென்ற தனசேகர், பின், களக்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து, தனசேகரை மிரட்டிய 17 வயது சிறுவன், சுரேஷ் 20, சுடலைக்கண்ணு, 19, இசக்கிப்பாண்டி, 19, ஆகியோரை கைது செய்தனர். சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மற்ற மூவரையும் திருநெல்வேலி சிறையில் அடைத்தனர்.