ஹாக்கி போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி வெற்றி: வீரர்களுக்கு பாராட்டு

திருப்பரங்குன்றம்: மாநில ஹாக்கி போட்டிகளில் 2ம் இடம் வென்ற மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி அணி வீரர்களை நிர்வாகிகள் பாராட்டினர்.

கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கி போட்டிகள் சென்னை வைஷ்ணவ் கல்லுாரியில் நடந்தது. முதல் சுற்று ஆட்டங்கள் லீக் முறையிலும், அரை இறுதி, இறுதிப் போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடந்தன. 8 கல்லுாரிகள் பங்கேற்றன.

இறுதி ஆட்டத்தில் லயோலா கல்லுாரி அணி, சவுராஷ்டிரா கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் இடம் வென்ற சவுராஷ்டிரா கல்லுாரி அணி வீரர்களை கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், முன்னாள் முதல்வர் ரவிச்சந்திரன், விளையாட்டுக்குழு நிர்வாகிகள் ஜெயந்தி, விஷ்ணு பிரியா, ஜீவப்பிரியா, குபேந்திரன், பாலாஜி, செந்தில், கணேசன் பாராட்டினர்.

Advertisement