நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள்
பழநி: பழநி வழியே கோவை, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை உள்ளது.
சில இடங்களில் மேம்பாலங்கள் முடிவடையாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதி வேகத்தில் செல்கிறது.
பாதையில் சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்க ரோட்டோரத்தில் இடம் ஒதுக்க வேண்டிய சூழல் உள்ளது.
தாழையூத்து பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக கனரக வாகனங்கள் வருகின்றன. இவைகள் ரோட்டோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
அதிகாலை, இரவு நேரத்தில், வேகமாக வரும் வாகனங்கள் இதனால் நிலை தடுமாறும் நிலை ஏற்படுகிறது.
தாழையூத்து பகுதியில் நான்கு வழி ரோடை விட்டு விலகி பழநி நோக்கி வரும் ரோடு சந்திப்பு பகுதியில் எதிரே வரும் வாகனங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பழநி நோக்கி வரும் வாகனங்கள் எதிரெதிரே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அங்கும் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!