பணம் கேட்டு தொல்லை கொடுக்குறாங்க

திண்டுக்கல்: பணம் கேட்டு தொல்லை கொடுக்குறாங்க என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் மனுக்களாக எழுதி வந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 187 மனுக்கள் பெறப்பட்டது.

கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ.1.45 லட்சம் மதிப்பிலான திறன்பேசி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு இலவச தேய்ப்பு பெட்டிகள், 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

ஆர்.டி.ஓ., சக்திவேல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி பங்கேற்றனர்.

Advertisement