ஒட்டன்சத்திரத்தில் இலவச திருமணம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 மணமக்களுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் சக்கரபாணி நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, அன்னபூரணி, பழநி கோவில் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமி, உதவி இணை ஆணையர் லட்சுமிமாலா, நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலு, சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் சோமசுந்தரம் பங்கேற்றனர்.

Advertisement