திருச்செந்துார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்ர மணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்துார் சுப்ர மணிய சுவாமி கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, அதிகாலை 1:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து, கோவில் கொடிமரம் முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித் திருவிழா கொடியை பட்டாச்சாரியார் முத்துக்குமார சுவாமி ஏற்றினார்.
தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையுடன் நடந்தது.
கோவில் தக்கார் அருள்முருகன், இணை கமிஷனர் ஞானசேகரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் 12 நாட்கள் நடக்கும் மாசி திருவிழாவில் ஏழாம் திருநாளான ஒன்பதாம் தேதி சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சியும், எட்டாம் திருநாளான 10ம் தேதி அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
அன்றைய தினம் மதியம் 12:00 மணிக்கு மேல் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாள் தேரோட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். 11ம் திருநாளான 13ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!