போலீஸ் செய்திகள்.......
விவசாயி பலி
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி ஐவர்மலை பிரிவு பகுதியில் நேற்று இரவு மாட்டுவண்டியில் சின்ன கவுண்டன் புதுரை சேர்ந்த கவுதம் 27. பழநி மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது பாப்பம்பட்டியிலிருந்து மண் ஏற்றி வந்த லாரி மாட்டு வண்டியின் பின்னால் மோதி கவுதம் இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
ஆயக்குடி: பழநி புளியம்பட்டி அருகே மொல்லம்பட்டியில் வசிப்பவர் வீரமணி 40. ஆயக்குடிக்கு உறவினர் வீட்டிற்கு வந்தார். ஆயக்குடி ரயில்வே கேட்டை கடக்கும் போது அந்த வழியே வந்த சரக்கு ரயில் மோதி இறந்தார். பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி பலி
கள்ளிமந்தையம்: தொப்பம்பட்டி சரவணம்பட்டியை சேர்ந்த சூர்யா 22. டூவீலரில் வாகரை-பூலாம்பட்டி ரோட்டில் நேற்று காலை 11:00 மணிக்கு சென்றார். இங்குள்ள சண்முகம் தோட்டம் சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த பாலத்தில் மோதி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
4 ஆடுகள் பலி
குஜிலியம்பாறை: ஆர் கோம்பை ஊராட்சி புங்கம்பாடியை சேர்ந்தவர் டிரைவர் சண்முகராஜ் 32. இவரது தோட்டத்து வீட்டில் கட்டி இருந்த 4 வெள்ளாடுகளை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து கொன்றது. இதனால் ஆடு வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூதாடிய 3 பேர் கைது
சாணார்பட்டி: போலீஸ் எஸ்.ஐ., வேலுச்சாமி போலீசார் மந்தநாயக்கன்பட்டி ஆண்டிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் 65. நத்தம் முளையூரை சேர்ந்த ஆசை அலங்காரம் 29,மந்த நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி 45, ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 53 சீட்டு கட்டுகள்,ரூ.1500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு