கட்டடங்கள் திறப்பு

பழநி: பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஆயக்குடி பேரூராட்சி 10வது வார்டு அங்கன்வாடி மையம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ. 12.67 லட்சத்தில் கருப்பண கவுண்டன் வலசு ரேஷன் கடை ரூ.5 லட்சம் மதிப்பில் கோதைமங்கலத்தில் கலையரங்கம் பழநி நகராட்சி 11,6,31 வார்டுகளில் அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார்.

தாசில்தார் பிரசன்னா, தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.

Advertisement