இருவர் கொலை: சி.பி.ஐ., விசாரிக்கக்கோரி முற்றுகை

தேனி: கடமலைக்குண்டு அருகே விவசாயிகள் கருப்பையா, மணி சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.

இவர்களது உடல்கள் அரசு மருத்துவக்கல்லுாரியில் பிரேத பரிசோதனை முடிந்தது. ஆனாலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நேற்று வரை உடல்களை உறவினர்கள் பெறவில்லை.

கொலை வழக்கு தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டது.

முற்றுகையிட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.

மனுவில், வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர்., நகல் வழங்க வேண்டும். வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தனர். மாலைவரை கலெக்டர் அலுவலகம் முன் காத்திருந்தனர்.

Advertisement