இன்று 'கள்' விடுதலை கருத்தரங்கம்

உடுமலை; உடுமலை கொங்கல்நகரத்தில், 'கள்' விடுதலை கருத்தரங்கம் இன்று காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.

தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், இக்கருத்தரங்கம் நடக்கிறது. தென்னை, பனை மரங்களில் இருந்து 'கள்' இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement