மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மொழி தேர்வில் 171 பேர் 'ஆப்சென்ட்'

கரூர்: மாவட்டத்தில் பிளஸ் 2 மொழி தேர்வில், 171 மாணவ, மாண-வியர் தேர்வு எழுத வரவில்லை என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.


கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்-ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மையத்தை, கலெக்டர் தங்-கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கி வரும், 27 வரை நடக்கி-றது. அந்த வகையில் நேற்று பிளஸ் 2 தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், அரபிக் ஆகிய மொழி பாடத்தேர்வுகள், 45 தேர்வு மையங்களில் நடந்தது.


இந்த தேர்வை, 4,773 மாணவர்கள், 5,490 மாணவியர் என மொத்தம் 10,263 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில், 10,092 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வில் 96 மாணவர்கள், 75 மாணவியர் என, 171 பேர் தேர்வு எழுத வர-வில்லை.
தேர்வு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவ-ரத்து துறை மூலம் தேர்வு எழுதும் மையங்களுக்கு, வந்து செல்ல தேவையான அளவு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க, 112 நிலையான படை மற்றும் பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

Advertisement