தக்காளி விலை சரிவு; விவசாயிகள் அதிர்ச்சி
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) -- 150 ரூபாய், தேங்காய் (ஒன்று) -- 35, கத்தரிக்காய் -கிலோ - 13, முருங்கைக்காய் --- 80, வெண்டைக்காய் --- 35, முள்ளங்கி --- 15, வெள்ளரிக்காய் --- 20, பூசணிக்காய் --- 10, அரசாணிக்காய் --- 7, பாகற்க்காய் --- 25, புடலை --- 15, சுரைக்காய் --- 7, பீர்க்கங்காய் --- 15, பீட்ரூட் --- 12, அவரைக்காய் --- 25, பச்சை மிளகாய் --- 30 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தற்போது தக்காளி பெட்டிக்கு -- 100 ரூபாய், பாகற்காய், அவரைக்காய் கிலோவுக்கு 5, மற்றும் பாகற்காய் கிலோ- 20 ரூபாய் விலை குறைந்துள்ளது. கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோவுக்கு 5, பச்சை மிளகாய் கிலோ 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது, வழக்கத்தை விட தக்காளி வரத்து ஒரு டன் அளவுக்கு அதிகமாக இருந்ததால் விலை சற்று குறைந்தது. தக்காளி விலை சரிவு, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ளதால் வரும் நாட்களில் காய்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு