மயில் கூட்டம் படையெடுப்பால் விளை நிலம் நாசம் சரணாலயம் அமைத்து பாதுகாக்கப்படுமா?
நாமக்கல்: 'தேசிய பறவையான மயில்கள், கூட்டம் கூட்டமாக படையெ-டுத்து சென்று விளை நிலைங்களில் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்வதால், விவசாயிகள் செய்வதறியாமல் விழிபிதுங்கி உள்ளனர். அதனால், மயில்களை பிடித்து
சரணாலயம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், காவிரிக்கரையோர பகுதிகளான பள்-ளிப்பாளையம், ப.வேலுார், மோகனுார் போன்ற பகுதிகளிலும், கொல்லிமலை, நாமக்கல், சேந்தமங்கலம் என, மாவட்டம் முழு-வதும் பரவலாக, வாழை, கரும்பு, நெல், நிலக்கடலை, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
காவிரி கரையோரத்தில் ஆற்று நீரையும், மற்ற இடங்களில், வாய்க்கால் மற்றும் கிணற்று நீரையும் பயன்படுத்தி அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், நம் தேசிய பறவையான மயில், மாவட்டம் முழுவதும் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மயில்கள், கூட்டம் கூட்டமாக சென்று, விளை நிலங்களில் சாகு-படி செய்துள்ள பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. அவற்றை விரட்டினாலும், கூட்டம் கூட்டமாக வந்து செல்-வதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்-ளனர். மேலும், கடலை, நெல், சோளம் போன்ற பயிர்களை அழித்து வருகிறது. தேசிய பறவை என்பதால், விவசாயிகள் அவற்றை விரட்டி மட்டுமே விடுகின்றனர். அவைகளால், விவசா-யிகள் பெருத்த
நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து, சேந்தமங்கலம் அடுத்த மலைவேப்பன்குட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி குமரேசன் கூறியதாவது:
நம் நாட்டின் தேசிய பறவையான மயில், தமிழ் கடவுளான முரு-கனின் வாகனமாக பார்க்கப்படுகிறது. ஈரோடு மற்றும் பெருந்-துறை பகுதியில் மட்டுமே இருந்த இப்பறவை, நாமக்கல் மாவட்-டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடம் பெயர்ந்துள்ளது. அதனால், இப்
பகுதியில் விவசாயம் செய்பவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளா-கின்றனர். குறிப்பாக நிலக்கடலை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, துவரை போன்ற தானிய வகைகள், தக்காளி உள்ளிட்ட பல காய்க-றிகளை, கொத்தி பெரும் பகுதியை வீணடிக்கிறது. அதன் காரண-மாக, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதிக-ளவில் பெருகியுள்ள மயில்களை, வனத்துறையினர் பிடித்து, வனப்பகுதியில் சரணாலயம் அமைத்து, அவற்றுக்கு தேவையான உணவுகளை அளித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு