குடிநீர் இல்லாமல் தவிக்கும் காரைக்குடி விரிவாக்கப் பகுதி

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள செந்தில் நகர், அண்ணாமலையார் நகர் பகுதியில் மக்கள் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர்.

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்டதாக இருந்த அண்ணாமலைபுரம் செந்தில்நகர், ராம்சுந்தர் நகர், கிரீன் சிட்டி ஆகிய பகுதிகள் தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இப்பகுதி அருகிலேயே உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளும், 40க்கும் மேற்பட்ட வீதிகளும் உள்ளன. இப்பகுதியில் சாலை, குடிநீர் வசதி தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை.

ஒரு தார்ச்சாலை கூட கிடையாது. அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை.

Advertisement