மேம்பாலத்தில் ஒளிராத மின்விளக்குகள்; இரவில் ஓட்டுநர்கள் திணறல்!

குப்பையை அகற்றுங்க!



கிணத்துக்கடவு, பெரியார் நகரில் அரசு பள்ளி சுவற்றின் ஓரத்தில், அதிகளவு குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால், சுகாதாரம் பாதித்து துர்நாற்றம் வீசுகிறது. முறையாக குப்பை தொட்டி வைத்து, பிளீச்சிங் பவுடர் துாவி, தினமும் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆறுச்சாமி, கிணத்துக்கடவு.

ஒளிராத மின்விளக்கு



பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மின் விளக்குகளை முறையாக ஒளிர செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- டேவிட், பொள்ளாச்சி.

துருப்பிடித்த பலகை



கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் மறைந்து துருப்பிடித்த நிலையில் இருக்கிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைத்து, புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- அசோக் குமார், கிணத்துக்கடவு.

அதிகரிக்கும் போஸ்டர்கள்



கிணத்துக்கடவு முக்கிய இடங்களில் போஸ்டர்கள் அதிகளவு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பதற்கு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொது இடத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

--- சரத்குமார், கிணத்துக்கடவு.

உருக்குலைந்த ரோடு



பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளியில் இருந்து, நல்லுார் செல்லும் கிருஷ்ணா குளம் ரோடு, உருக்குலைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.

--- சரவணன், பொள்ளாச்சி.

விபத்து அபாயம்



உடுமலை தளி மேம்பால ரோட்டில், ஆபத்தான முறையில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்வாறு விதிமீறி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வம், உடுமலை.

சுகாதாரம் பாதிப்பு



உடுமலை, சின்னவீரம்பட்டி ரோட்டோரத்தில் கழிவுகள் குவிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும்போது மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் காற்றில் பறந்து ரோட்டிலும் பரவுவதால், வாகன ஓட்டுநர்கள் முகம் சுழிக்கின்றனர்.

- அன்பழகன், உடுமலை.

தெருவிளக்குகள் எரிவதில்லை



உடுமலை, சவுதாமலர் லே-அவுட்டில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் அப்பகுதியினர், வெளியில் சென்றுவருவதற்கு வீதியில் இருள் சூழ்ந்திருப்பதால் அச்சப்படுகின்றனர். தெருநாய்களும் பொதுமக்களை அடையாளம் காணாமல், இருளில் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன.

- ஜெயராணி, உடுமலை.

கழிவுகளை அகற்றணும்



உடுமலை நகரம் சரவணா வீதியில், குப்பை, கழிவுகள் குவிந்து காணப்படுகினறன. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கார்த்திக், உடுமலை.

ரோட்டில் கட்டுமான பொருட்கள்



உடுமலை, சர்தார் வீதி ரோட்டில் கட்டுமான பொருட்கள் ரோட்டை ஆக்கிரமித்து கொட்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோரும் அவதிப்படுகின்றனர்.

- கார்த்திக்குமார், உடுமலை.

அடையாளம் இல்லை



உடுமலை, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் இரண்டாவது வீதியில் வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். நடைபயிற்சி செல்வோரும் இதனால் தடுமாறி விழுகின்றனர்.

- சாய்பிரதீப், பெரியகோட்டை.

கால்வாயில் குப்பை



பொள்ளாச்சி, சாந்தி நிகேதன் பள்ளி செல்லும் ரோட்டில் கழிவு நீர் கால்வாயில், மரக்கிளைகள் மற்றும் குப்பை அதிகமாக இருப்பதால், கழிவு நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி, குப்பையை முறையாக அகற்ற வேண்டும்.

-- டேனியல், பொள்ளாச்சி.

Advertisement