ஆவணம் இன்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளம் எடுத்துச்சென்ற லாரிகளை கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள, சிங்கையன்புதூர் பகுதியில், கோவை கனிமவளத் துறை அதிகாரிகள், டிப்பர் லாரியில் கற்கள் கொண்டு செல்வதை சோதனை செய்து கொண்டிருந்தனர். இப்போது, அவ்வழியே சென்ற, தமிழக பதிவு எண் கொண்ட இரண்டு டிப்பர் லாரிகள் சோதனை செய்யும் போது, 2 லாரிகளிலும் உரிய ஆவணங்கள் இன்றி ஆறு யூனிட் கற்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கனிமவளத் துறை அதிகாரிகள் லாரிகளை பறிமுதல் செய்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement