நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்த அரசு கட்டடமும் தப்பல! ஜப்தி நோட்டீஸ் வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அரசு கட்டடங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் மக்கள் தொகை உள்ளது. சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டுக்கு ரூபாய் 53.93 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உரிய காலக்கெடுவிற்குள் செலுத்தப்படாமல் வரி நிலுவையாக இருந்து வருகிறது. தற்போது வரி வசூலை தீவிரப்படுத்த குழு அமைத்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்துள்ள கட்டடங்கள் குறித்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, வரியை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பலமுறை தெரிவித்தும் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கட்டடங்களுக்கு ஜப்தி அறிவிப்பு வழங்கி வருகின்றனர். பூட்டிய கட்டடங்களில், ஜப்தி அறிவிப்பு பிளக்ஸ் ஒட்டியும் வசூலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அரசு கட்டடங்களுக்கும் ஜப்தி நோட்டீஸ் வழங்கி வரி செலுத்த அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சியில் செலுத்த வேண்டிய வரியினங்கள் வாயிலாக, வசூலாகக்கூடிய வருவாயை கொண்டு தான் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளும், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஈடு செய்யப்படுகின்றன.
வரி ஏய்ப்பு செய்துள்ள கட்டடங்களை முறைப்படுத்தி, வரி செலுத்தவும், வரி செலுத்தாத கட்டடங்களுக்கு வரி செலுத்த நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
அதில், பொள்ளாச்சி நகராட்சியில், 160 வரி விதிப்பு அரசு கட்டடங்கள் உள்ளன. கடந்தாண்டு வரை, 2 கோடியே, 21 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது. நடப்பாண்டு, 78 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 3 கோடியே, 26ஆயிரம் ரூபாய் நிலுவை உள்ளது.
இந்த வரியை செலுத்த பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அதிகளவு அரசு போக்குவரத்து கழகம் வரி நிலுவை வைத்துள்ளது. இந்த வரியை செலுத்த வேண்டுமென, அரசு கட்டடங்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படுகிறது. வரியை முறையாக செலுத்தினால் தான் நகராட்சியில் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் வரியை முறையாக செலுத்தி, நகராட்சியின் சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பொள்ளாச்சி நகராட்சியில், 160 வரி விதிப்பு அரசு கட்டடங்கள் உள்ளன. கடந்தாண்டு வரை, 2 கோடியே, 21 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது. நடப்பாண்டு, 78 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 3 கோடியே, 26ஆயிரம் ரூபாய் நிலுவை உள்ளது.
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு