சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா துவக்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட, சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று காலை 9:00 மணிக்கு உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் கிராமத்தினர், பக்தர்கள் பங்கேற்றனர்.

மதியம் 3:00 மணிக்கு இக்கோயிலில் இருந்து அரவங்கிரி என்ற அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. அங்கும் இரவு 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு காப்பு கட்டப்பட்டது. 10 நாள் திருவிழாவாக தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.

மார்ச் 7ம் தேதி திருக்கல்யாணமும், 8ம் தேதி கழுவன் திருவிழாவும் நடக்கிறது. மார்ச் 11ல் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

Advertisement