சிவகங்கையில் இயற்கை சந்தை

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை சந்தையை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.

மாவட்ட மகளிர் திட்டம்சார்பில் இயற்கை காய்கறி, பழங்கள், தேன், நெய் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும், இயற்கை சந்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டன. இச்சந்தையை கலெக்டர் துவக்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

சந்தையில் மகளிர் மூலம் ஸ்டால்கள் அமைத்து, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தனர். இங்கு அறுவடை செய்த உடன் கிடைக்கும் காய்கறிகள், கீரை வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

நேற்று பொது குறைதீர்கூட்டம் என்பதால் மனு அளிக்க வந்த அனைவரும் சந்தையில் விற்பனை செய்த பொருட்களை வாங்கி சென்றனர்.

Advertisement