சிவகங்கையில் பிளஸ் 2 தேர்வு 164 பேர் ஆப்சென்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 15 ஆயிரத்து 894 மாணவர்கள்தேர்வு எழுதினர்.இதில் 164 மாணவர்கள் தேர்விற்குவரவில்லை.

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில்68 அரசுப்பள்ளிகள் உட்பட 162 பள்ளிகளில் பயிலும் 7 ஆயிரத்து 157 மாணவர்கள், 8 ஆயிரத்து 737 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 894 மாணவர்கள் 83 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

இதில் 73 மாணவர்கள்91 மாணவியர் என மொத்தம் 164 மாணவர்கள்நேற்று தேர்வு எழுத வருகை புரியவில்லை. சிவகங்கை அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து உடனிருந்தார்.

Advertisement