மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கீழ்பையூரை சேர்ந்தவர் சின்னபாப்பா, 55; இவரது மகள் சாந்தி. இவரது கணவர் பெல்-லாரம்பள்ளியை சேர்ந்த பூங்காவனம், 47; குடிப்-பழக்கத்தால் மனைவி சாந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். மூன்று நாட்க-ளுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட சாந்தி, கீழ்பையூரிலுள்ள தாய் வீட்-டுக்கு சென்று விட்டார். மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர சென்றார்.


அப்போதும் குடிபோதையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த மாமியார் சின்னபாப்பாவிடம், 'நீ இருக்கும் வரை மனைவியை என்னுடன் வாழ விட மாட்டாய்' எனக்கூறி விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் சின்னபாப்பா ரத்த வெள்-ளத்தில் சரிந்தார். அப்பகுதியினர் மீட்டு கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் பூங்-காவனத்தை கைது செய்தனர்.

Advertisement