சீமானுக்கு சம்மன் வழங்க ஈரோடு போலீசார் சென்னையில் காத்திருப்பு
ஈரோடு: சீமானுக்கு சம்மன் வழங்க உயர் போலீஸ் அதி-காரிகள் உத்தரவு பிறப்பிக்காததால், ஈரோடு போலீசார் நான்கு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த மாதம் நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்-பாளர் சீமான் மீது, கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது, மிரட்டல் விடுத்தது என மூன்று பிரிவுகளில், கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிக்க, கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு கடந்த பிப்.,17ல் சென்று சம்மன் அளித்தனர். இதன்படி கடந்த பிப்.,௨௦ம் தேதி சீமான் ஆஜராகி இருக்க வேண்டும் ஆனால், சீமான் வராமல், அவரது வக்-கீல்கள் வந்து மனு அளித்தனர்.
இதனால் மீண்டும் கடந்த, 28ல் கருங்கல்பா-ளையம் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையி-லான போலீசார், சீமானிடம் சம்மன் வழங்க சென்னை வளசரவாக்கம் சென்றனர். உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து சம்மன் வழங்க இதுவரை உத்தரவு வராததால், சீமான் வீட்டுக்கு நான்கு நாட்களாக செல்லாமல் அங்-கேயே முகாமிட்டுள்ளனர்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை