ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலை; பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, ஆழியாறு புளியங்கண்டி அருகே நேற்று காலை ரோட்டோரம், 50 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இது குறித்து, தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரம் விழுந்ததால், அந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் அகற்றப்பட்ட பின், போக்குவரத்து சீரானது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பட்டுப்போன, காய்ந்த மரங்கள் குறித்து கண்டறிந்து அவற்றை அகற்றவும், அதற்கு மாற்றாக மரக்கன்றுகளை நடவு செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement