சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் போலீசார், ராமாபுரம் பகுதியில் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மூன்று டாரஸ் லாரிகள் வந்-தன.


அவற்றை சோதனை செய்ததில், சிலிக்கான் மணல் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த சென்னை, பாடியநல்லுார் கலைச்செல்வன், 28, ஊத்துக்கோட்டை ரகு, 45,
திருப்பதி சுதாகர், 36, கும்மிடிப்பூண்டி திருச்-செல்வம், 45, திருவள்ளூர் மாவட்டம் காவனுார் அசோகன், 43, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement