கைகொடுத்தது ஏ.ஐ.,: யானைகள் பலி இல்லை

போத்தனூர்; கோவையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் எச்சரிக்கையால், 2,500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கோவை மதுக்கரை வனப்பகுதியில், யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பலியாவது தொடர்கதையாக நடந்தது. இதையடுத்து கடந்தாண்டு வனத்துறை சார்பில் ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன், 12 டவர்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. 24 மணி நேரமும் கண்காணித்து, சமிக்ஞைகள் பெறப்பட்டன. அதன்மூலம் ரயிலை இயக்குபவருக்கு தகவல் தரப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்பட்டன. இரு இடங்களில் யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்ல, சுரங்க பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஓராண்டு கடந்த நிலையில் நேற்று மாலை வனத்துறை முதன்மை தலைமை செயலர் சுப்ரியா சாஹு ஆய்வு செய்தார்.
அதில் ஓராண்டில், 5,011 முறை ஏ.ஐ.,யின் எச்சரிக்கை சமிக்ஞைகள் பெறப்பட்டதும், 2,500 முறை யானைகள் பாதுகாப்பாக, தண்டவாளத்தை கடந்து சென்றதும் தெரியவந்தது
தொடர்ந்து, இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இரண்டு மணி நேரத்திற்கு பின் ஆய்வை முடித்துச் சென்றார்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை