கல்லுாரி மாணவர்களை மகிழ்வித்த பிரபலங்கள்

கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், ' உதயம் 25' என்னும் தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா நடந்தது.

இந்த விழாவில் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் சாராத மற்றும் கலாச்சார போட்டிகளில்,மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக, யூடியூப் பிரபலங்கள் ஹர்ஷத் கான், விஜே சித்து, நடன இயக்குனர் மற்றும் கலைஞர் ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர். ஹர்ஷத் கான், விஜே சித்து ஆகியோர் பல குரலில் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ரூ.50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து, முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், துணைமுதல்வர் மைதிலி, துறை டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement