ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கடலாடி: -கடலாடி அருகே அல்லிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

கமுதி நம்மாழ்வார் வேளாண்மை, தொழில்நுட்ப கல்லுாரியின் இறுதி ஆண்டு மாணவிகள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் மாணவர்களுக்கு ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பனை மரத்தின் மருத்துவ பயன்கள் பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் கல்லுாரி மாணவிகள் எடுத்துரைத்தனர்.

Advertisement