பொதுக்குழு கூட்டம் 

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மாவட்டத்தலைவர் லியோன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் வின்சென்ட் வீரு, மாவட்ட இணைச் செயலாளர் ஜெரோம் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துளிர் திறனறிவு தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் தினகரன், மாவட்ட செயலாளர் காந்தி, பொருளாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.

Advertisement