கிரிக்கெட் போட்டி பங்கேற்க அழைப்பு

திருப்பூர்; கல்லுாரி அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, ஆர்வமுள்ள அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், கல்லுாரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாம் ஆண்டுக்கான 'ஈஸ்ட்மேன் டிராபி' கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள கல்லுாரி அணிகள், வீரர்கள் தங்கள் அணி விபரங்களை, 8940038018, 9344207615 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மார்ச், 31 ம் தேதி அணி பதிவுக்கு கடைசிநாள்.

இத்தகவலை திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement