வீழப்போகுது மரம்; அகற்றினால் நலம்!

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் காங்கயம் ரோடு - தாராபுரம் ரோடு சந்திப்பு, மாரியம்மன் கோவில் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- நித்யஸ்ரீ, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா எதிரில் குழாய் உடைந்து, தண்ணீர் 24 மணி நேரமும் வீணாகிறது.

- ரமேஷ், பல்லடம் ரோடு. (படம் உண்டு)

கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், பரமன் ஊற்று கருப்பராயன் கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

- அமரன், கோவில்வழி. (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் ரயில் பாலத்தின் கீழ் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகிறது. கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.

- ரஞ்சித், அணைப்பாளையம். (படம் உண்டு)

விழும் நிலையில் மரம்

சூசையாபுரம் இரண்டாவது வீதியில் மரத்தின் அடிப்பாகம் ஓட்டையாக எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. விழும் முன் வெட்டி அகற்ற வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், சூசையாபுரம். (படம் உண்டு)

குழியை மூடுங்க

மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா முன்புறம் சாலையில் உள்ள குழியை மூட வேண்டும். நடுரோட்டில் உள்ள குழியால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.

- தேவராஜ், பார்க் ரோடு. (படம் உண்டு)

Advertisement