குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்;
மத்திய அரசு ஜன் அவ்ஷதி கேந்திரா சார்பில், நாடு முழுவதும் ஜன் அவ்ஷதி திவாஸ் எனும் கொண்டாட்டம் மார்ச் 1 முதல், 7ம் தேதி வரை நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜன் அவ்ஷதி கேந்திரா சார்பில், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நேற்று நடந்தது.

பாரத் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் அருண் பாரத், மத்திய அரசின் ஜன் அவ்ஷதி கேந்திரா கண்காணிப்பாளர் அரவிந்த்சாமி, தேசிய சிந்தனை கழகத்தின் திருப்பூர் மாநகர தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, போஷான் எனும் சத்துமாவு பெட்டகம், பந்து பரிசளிக்கப்பட்டது.

Advertisement