'டெக்ஸத்தான் - 3.0'! 18, 19ம் தேதிகளில் தொழில் திருவிழா; 'அடல் இன்குபேஷன்' மையம் ஏற்பாடு

திருப்பூர்; இளைஞர், இளம் பெண்களின், முற்றிலும் மாறுபட்ட வகையிலான புத்தாக்க தொழில் முன்னெடுப்புகளை ஊக்குவிக்கும், 'டெக்ஸத்தான் -3.0' தொழில் திருவிழா, திருப்பூரில் நடக்கிறது.
மத்திய அரசின் நிதி ஆயோக், 'அடல் இன்னோவேஷன் மிஷன்', 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு, 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், 'டெக்ஸத்தான் -3.0' என்ற தொழில் திருவிழா, வரும் 18, 19ம் தேதிகளில் திருப்பூரில் நடக்க உள்ளது. புதிய தொழில் திட்டம், புத்தாக்க திட்டம் தயாரித்துள்ள இளைஞர், இளம்பெண்கள், வரும் 5ம் தேதி மாலைக்குள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'நிப்ட்-டீ அடல் இன்குபேஷன்' மைய ஆராய்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:
புதிய தொழில்முனைவோரை ஊக்குவித்து, புத்தாக்க தொழில்கள் துவங்க, 'அடல் இன்குபேஷன்' மையம் வழிகாட்டி வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில், தொழில் துவங்கும் முனைவோருக்கு அரசு திட்டங்களில், கடனுதவி பெற வழிகாட்டப்படும்; முன்னணி நிறுவனங்களின் உதவியும் பெற்றுத்தரப்படும். மறுசுழற்சி, மறுபயன்பாட்டுடன் கூடிய மறுசுழற்சி, இயற்கை சாயமிடல், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான புதிய தொழில்நுட்பம், புத்தாக்க தொழிலாக உருவாக்கப்படுகிறது.
'ஸ்டார்ட் அப்' பிரிவினரும், தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் என, இரண்டு பிரிவுகளாக, இந்நிகழ்ச்சி நடத்தப்படும். மாணவர்களின் புதிய யோசனைகளும், புத்தாக்க தொழில்துவங்க பரிசீலனைக்கு ஏற்கப்படும். விண்ணப்பித்துள்ள நபர்களில், தகுதியான பதிவுகள் தேர்வு செய்யப்பட்டு, வரும், 8ம் தேதி முதல், நேரடி செயல்விளக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்.
தேர்வான நபர்கள் முழு அளவில் தயாராக வந்து, வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கும், 'டெக்ஸத்தான் -3.0' தொழில்முனைவோர் விழாவில், நேரடியாக செயல் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு, புத்தாக்க தொழில்துவங்க தகுந்த உதவிகள் அளிக்கப்படும். இளைஞர்களின் புதிய முயற்சி மற்றும் தொழில்நுட்பங்களை, 'ஸ்டார்ட் அப்' தொழில்களாக மாற்றும் நோக்கில், இவ்விழா நடக்கிறது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 84 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை