கால்நடை சந்தை வரத்து குறைந்தது

திருப்பூர்; அமராவதிபாளையத்தில் நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, 854 கால்நடைகள் வரத்தாக இருந்தது. கன்றுகுட்டி, 4,000 - 6,000 ரூபாய். காளை, 28 ஆயிரம் - 32 ஆயிரம். எருமை 27 ஆயிரம் - 31 ஆயிரம், பசு மாடு, 28 ஆயிரம் - 34,000 ரூபாய்க்கு விற்றது.

கடந்த இரு வாரங்களாக கால்நடை வரத்து, 900 தாண்டியிருந்தது. நடப்பு வாரம் வரத்து, 854 ஆக குறைந்துள்ளது. மாடுகள் வரத்து மற்றும் விற்பனை குறைவால், 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement