பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்லடம் தாலுகாவில், நீரில் மூழ்கி இறந்த நபரின் வாரிசு தாரருக்கு, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை; நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பல்லடம் தாலுகா, அறிவொளி நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒன்பது பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை கலெக்டர் கிறிஸ்து ராஜ் வழங்கினார்.

Advertisement