இருக்கன்குடி அணையில் வளரும் முள் செடிகள்

சாத்துார்: இருக்கன்குடி அணையில் வளரும் முள் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைப்பாறு அர்ச்சுனா நதி ஆகிய இரு நதிகளுக்கு இடையே இருக்கன்குடி அணை கட்டப்பட்டுள்ளது. இருக்கன்குடி அணையின் மூலம் பல நுாறு ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்ததால் அணையில் வளர்ந்திருந்த முள் செடிகள் வேர் அழுகி கருகிவிட்டன.

தண்ணீரில் மூழ்கி அழுகிய முள் செடிகள் தற்போது மீண்டும் துளிர்விட்டு முளைக்கத் துவங்கி உள்ளன. முள் செடிகள் முழுமையாக வளர்ந்தால் அணையில் தேங்கியுள்ள குறைந்த அளவு தண்ணீரையும் உறிஞ்சி விடும் அபாயம் உள்ளது. எனவே அணையில் புதியதாக முளைத்து வரும் முள் செடிகளை முளையிலேயே கிள்ளி எறியபொதுப்பணித்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement