ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம்
திருச்சுழி:" திருச்சுழி திருமேனிநாதர் கோயில் அருகில், ரேஷன் கடைகள் விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சுழி கிடங்கில் இருந்து அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தரமற்ற நிலையிலும் எடை குறைவாகவும் வழங்கப்படுவதை கண்டித்தும் அதிகாரிகள் ரேஷன் கடை பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து, தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்திவடிவேல், செயலாளர் ராமு, பொருளாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், காரியாபட்டி பகுதியில் 70 ரேஷன் கடைகளும், திருச்சுழி பகுதியில் 96 ரேஷன் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து, சங்க மாவட்ட தலைவர் செந்திவடிவேல் : திருச்சுழி கிடங்கில் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தரமற்றும், எடை குறைவாகவும் வழங்கப்படுகிறது. மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு துறை அதிகாரிகள், மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எதுவும் எடுப்பது இல்லை. கிடங்கை ஆய்வு செய்ய வருவதும் இல்லை.
ஆனால் கடை நிலை ஊழியர்களான ரேஷன் கடை விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம். கிடங்கை ஆய்வு செய்ய மாவட்ட அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்.
திருச்சுழி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம் மற்றும் இலுப்பையூர் ரேஷன் கடை விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டிக்கிறோம். மார்ச் 3 முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை